காதலி கண்ணருகே
முழுமதியோ முகமெதிரே
காதலியோ கிட்டவில்லை
நிலவதுவோ எட்டவில்லை
இரண்டும் எனக்கெட்டாக்கனி
கைக்கிணங்கா மூடுபனி
கவிதை"நடை" போடுமிடம்... கருத்தும் கை கோர்க்குமிடம்
Tuesday, December 21, 2010
Wednesday, December 8, 2010
காதல்
காதல்
காத்திருத்தலின் சுருக்கம்தான் காதலோ
காணாதிருத்தலின் சுகமும் காதலோ
செல்லெங்கும் நுழைந்து புரையோடிய புற்றுநோயோ
கண்டதால் அண்டிக்கொண்ட தொற்றுநோயோ
புற்றையேனும் நீக்க முடியும்
ஒன்றறக் கலந்த காதலை எவ்விதம் நீக்குவேன்
நெஞ்சம் வலிக்குதடி
நினைவுகள்
தொல்லை கொடுக்குதடி
நாளும் நின் சிந்தனை
நாகத்தின் விஷந்தனைப்
போல் என்னுள் புகுந்தனை
நின் வேல் நாசியோ
கூர்வாள் விழியோ
ஆழ்ந்த அடர் அலைக்கூந்தலோ
அனல் வீச்சு மூச்சுக்காற்றோ
ஏதேனும் ஒன்றால்
என்னாயுள் முடித்துவிடு
முடியவில்லை என்னால்
இந்த நரக வேதனை இன்னும்
எத்தனை நாளோ
மண்ணுக்குள் போகும் வரையிலா
இல்லை
மண ஒப்புதல் நீ தரும் வரையிலா???
காத்திருத்தலின் சுருக்கம்தான் காதலோ
காணாதிருத்தலின் சுகமும் காதலோ
செல்லெங்கும் நுழைந்து புரையோடிய புற்றுநோயோ
கண்டதால் அண்டிக்கொண்ட தொற்றுநோயோ
புற்றையேனும் நீக்க முடியும்
ஒன்றறக் கலந்த காதலை எவ்விதம் நீக்குவேன்
நெஞ்சம் வலிக்குதடி
நினைவுகள்
தொல்லை கொடுக்குதடி
நாளும் நின் சிந்தனை
நாகத்தின் விஷந்தனைப்
போல் என்னுள் புகுந்தனை
நின் வேல் நாசியோ
கூர்வாள் விழியோ
ஆழ்ந்த அடர் அலைக்கூந்தலோ
அனல் வீச்சு மூச்சுக்காற்றோ
ஏதேனும் ஒன்றால்
என்னாயுள் முடித்துவிடு
முடியவில்லை என்னால்
இந்த நரக வேதனை இன்னும்
எத்தனை நாளோ
மண்ணுக்குள் போகும் வரையிலா
இல்லை
மண ஒப்புதல் நீ தரும் வரையிலா???
Tuesday, December 7, 2010
மைனாவின் தாக்கம்
கனிமொழி மற்றும் மைனா... ஒரே நாளில் காண நேர்ந்தது.. இரண்டுமே மனதின் வேதனையையே அதிகப்படுத்தின.. முன்னது, நான் கடந்து வந்த வழியையும், பின்னது, என்னுள் படர்ந்த வலியையும் நினைவு படுத்தின.."காதலித்து பாருங்க வாழ்க்கை அழகாகும்" -எவ்வளவு ஆழமான, அழுத்தமான உண்மை!! வாழ்க்கை அழகாகிறதோ இல்லையோ நமது கற்பனையும் எண்ணங்களும் அழகாகும் இல்லையேனும் பின்னாளில் அஃது தரும் நினைவுகளேனும் பசுமையானதாய் இருக்கும்.
காதலியின் காலில் சிறு முள் தைத்தாலும் தன்னுயிரே போனதாய் வருந்தும் பாமரக் காதலன் அதரப் பழமைதான் என்றாலும் நெஞ்சம் பரிதவிக்குதன்றோ பசுமையாய் உள்ளதன்றோ!!
இன்றைய சூழலில் மேட்டுக்குடியினர் காதல்தாம் மாண்பு மிகுந்தது என்று மக்கள்தம் மனதில் விஷமிகு வித்து விதைந்துள்ளது.. ஆனால் கடுகளவும் கள்ளமில்லாத பாகற்காய் அளவும் பாங்கிழைக்காத இத்தகைய பாமரரிடையே தான் பாசமும் அன்பும் கொட்டிக்கிடக்கின்றது என்பது கொட்டமடிக்கத் தேவையில்லை
நேரமில்லை,,, துயில் என்னை ஆட்கொள்கிறது. முதன் முயற்சியாதலால் சிறிது மூச்சு வாங்கி அயர்ச்சி நீங்கி ஆற அமர அடுத்த கட்டத்துக்கு தயாராகி வருகிறேன்... சொற்குற்றமோ பொருட்குற்றமோ இருப்பின் அரிச்சுவடி மாணாக்கனை மன்னிக்கவும்
Subscribe to:
Posts (Atom)
